முருகப்பெருமானின் அருளால் ஸ்ரீ ரெஜித் குமார் அவர்கள் நிகழ்த்தவுள்ள உலகளாவிய ஒளி உடல் செயல்பாடு

 







பூமியின் உணர்வு நிலை மாற்றத்தில் ஸ்ரீ ரெஜித் குமார் அவர்களின் பங்கு


முருகப்பெருமான் சித்தர்களின் உதவியுடன் உலக விவகாரங்களுக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ள வந்துள்ளார். 2013-ஆம் ஆண்டு முருகயுகம் துவங்கியது, மேலும் அது 2000 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும். முருகப்பெருமான், முருக யுகத்தில் தனது தெய்வீக கடமைகள் ஆற்றுவதற்காக ஸ்ரீ ரெஜித் அவர்களை தெய்வீக கருவியாக தேர்வு செய்து மற்றும் ஆன்மீகத்திலும்  குறிப்பிட்ட சில கடமைகளையும் ஆற்றுவதற்கு 2004-ஆம் ஆண்டு முதலே ஸ்ரீ ரெஜித் குமார் அவர்களை தயார் செய்துள்ளார்.

முருகப்பெருமான் ஸ்ரீ ரெஜித்குமாருக்கு அவரது பணியின் நோக்கமாக முருகயுகத்திற்கு பல கடமைகளை செய்வதும்,தமிழ் நாகரீகத்தின் முக்கியத்துவம் மற்றும் குமரிகண்டம் செவ்வாய் கிரகத் தொடர்பினையும் உலகறியச் செய்வதுமாக இருக்கும் என்பதனை வெளிப்படுத்தினார். முருகப்பெருமான் ஸ்ரீ ரெஜித் குமார் அவர்களை ஒரு இயல்பான இல்லற வாழ்க்கையில் இருந்து இந்த பணிகளை செய்யவேண்டும் என்றும் வழிகாட்டியுள்ளார்.

மே 1, 2017ம் ஆண்டு, பழனியில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்த பிறகு, முருகப்பெருமானின் தெய்வீக வழிகாட்டுதலுடன் லயன் மயூரா ராயல் கிங்டம் (LMRK) தொடங்கப்பட்டது. அதன் தலைமையகம் கேரளாவில் உள்ள திரிசூரில், நிறுவனர் ஸ்ரீ ரெஜித் குமார் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீ ரெஜித் குமார் அவர்கள் தலைவராக இருந்து LMRK உறுப்பினர்களுக்கிடையே சகோதரத்துவத்தை வளர்த்து வருகிறார். முருகப்பெருமானின் தெய்வீக வழிகாட்டுதலின் படி மட்டுமே முருக யுகத்தில் LMRK இயக்கத்தின் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் LMRK இயக்கத்தின் மூலமாக, முருகப்பெருமான் தரும் தெய்வீகப் பணிகளை செய்வதன் மூலம் தெய்வீக ஒளியும் அன்பும் உலகில் பெருகுகிறது. இதற்காக  கார்த்திகை ஆற்றல் உள்ள 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கும் குமரி கண்டம் ஆன்மாக்கள் இந்த இயக்கத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முருகயுகத்தை நிறுவுவதற்கான தேவையான ஆற்றல்களைப் பெறுவதற்கான தெய்வீகப் பணிகளை முருகப்பெருமானின் வழிகாட்டுதலில் ஸ்ரீ ரெஜித் குமார் மற்றும் LMRK உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர். வரும் காலங்களில் ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள், ஆதி சங்கராச்சாரியார் மற்றும் விக்ரமாதித்ய மஹாராஜா அவர்கள் LMRK இயக்கத்திற்கு வழிகாட்டுவார்கள் என்றும் ஸ்ரீ ரெஜித்குமாருக்கு முருகப்பெருமான் வெளிப்படுத்தியுள்ளார்.

LMRK இயக்கத்துடன் ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் எவ்வாறு இணைந்திருக்கிறார்?

ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் வாழ்ந்த இடத்திற்கு தைப்பூச திருநாள் (28-01-2021) அன்று சென்று தரிசனம் செய்து அருள் பெற ஸ்ரீ ரெஜித் குமார் அவர்களுக்கு முருகப்பெருமான் வழிகாட்டினார்.











ஸ்ரீ ரெஜித் குமார் அவர்கள் சென்னைக்கு பயணம் செய்து ஸ்ரீ இராமலிங்க சுவாமிகளின் அருள் வேண்டி பிரார்த்தனைகள் மற்றும் தியானம் செய்தார். அவர்கள் சென்ற இடங்கள் i) ஏழு கிணறில் உள்ள ஸ்ரீ இராமலிங்க சுவாமிகளின் இல்லம், முருகப்பெருமான் சிறு பாலகனாக கண்ணாடியில் ஸ்ரீ இராமலிங்க சுவாமிகளுக்கு காட்சி அளித்த இடம் ii) திருவொற்றியூரில் உள்ள ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் மடம், புனித கண்ணாடி தற்போது வைக்கப்பட்டிருக்கும் இடம் iii) திருவொற்றியூரில் உள்ள ஸ்ரீ தியாகராஜா சுவாமிகள் திருக்கோயில். சென்னையில் ஸ்ரீ ரெஜித் குமார் அவர்களுக்கு ஸ்ரீ இராமலிங்க சுவாமிகளின் அருள் கிடைத்ததாக அவர் பகிர்ந்திருந்தார். மேலும் ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் LMRK-வின் எதிர்கால பணிகளுக்கு வழிகாட்டுவார் என்று முருகப்பெருமான் ஸ்ரீ ரெஜித் குமார் அவர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.












தற்போது ஒளி உடல் செயல்பாடு ஏன் அவசியம்?

நாம் அனைவரும் எல்லையற்ற அன்பு மற்றும் ஒளியின் மூலத்தில் இருந்து தோன்றியுள்ளோம். ஆன்மா என்பது பரமாத்மாவின் பிரிக்க முடியாத ஒரு அம்சமாகும். பூமிக்கு நுழையும் போது  ஆன்மாவானது மாயையுடன் விளங்குகிறது. ஆன்மாவானது பிறவிகள் பல எடுத்து மீண்டும் இறை அருளால் அதன் மூலமான பரமாத்விற்கே செல்ல வேண்டுகிறது.

ஒரு மனிதன் மூன்று நிலைகளை கடந்து செல்கிறான் - i) சாதாரண நிலை ii) ஆன்மீக நிலை iii) முக்தி நிலை. ஒரு சாதாரண மனிதன் பல பந்தங்கள் மற்றும் கர்மாக்களை தாங்கி இருப்பதால், அவன் முக்தி அடைவது கடினம். முக்தி அடைவதற்காக மனித உடலை ஒளி உடலாக மாற்ற ஒவ்வொரு நிலைகளாக சித்தர்கள்  வழிகாட்டியுள்ளனர். இந்த சுத்திகரிப்பு செயல்களின் மூலம், நாம் மாயை, கர்மம், ஆணவம் போன்ற கழிவுகளை நீக்கிக்கொள்ள முடியம். இவைகள் நாம், மனித உடலில் இருந்து ஒளி உடலுக்கு மாறுவதற்கு தடையாக விளங்கக்கூடியவை. ஒளி உடலினால் மட்டுமே ஒருவன் இறையோடு முழுமையாக கலந்து சூன்ய நிலை அடைந்து சுயத்தை உணரமுடியும்.

ஒருவருக்கு ஒளி உடல் கிடைத்தபிறகு, அவரால் இறையுடன் உரையாட முடியும், ஜோதியுடன் கலக்க முடியும், மனித உடலை இழந்த பிறகு ஒளி உடல் மூலம் செயல்பட முடியும். இறைவன் என்பது ஜோதியே. ஒருவர் ஒளி உடல் நிலை அடைந்த பிறகு ஜோதியுடன் முழுமையாக கலந்து இறையின் தெய்வீக ஆற்றல்களுக்கு வழித்தடங்களாக ஆகலாம். இது ஆன்மீகத்தில் ஒருவனுடைய மிகப்பெரிய மைல்கல் என்று கருதப்படுகிறது. திருப்பதியில் உள்ள கொங்கண சித்தரும், பழனியில் உள்ள போகர் சித்தரும், ஜீவ சமாதி அடைந்த பிறகு இன்றளவும் ஒளி உடலால் உலகில் மிகுந்த சக்தியுடன் விளங்கி பல ஆன்மாக்களுக்கு உதவி வருகிறார்கள், இந்த மாபெரும் ஆன்மீக குருமார்கள் ஒளி உடலின் முக்கியத்துவத்திற்கு சிறந்த உதாரணமாக உள்ளனர். அவர்கள் தங்களின் தெய்வீகக் கடமைகளை செய்வதற்கு ஒளி உடல் மூலம் அவர்களால் நேரம், காலம், தூரம் கடந்து செல்ல முடியும்.

ஸ்ரீ ரெஜித் குமார் அவர்களின் தலைமையில் ஒளி உடல் செயல்பாடு இதைத்தான் செய்ய உள்ளது. அசாதாரணமாகத் தோன்றுகிறதா? இது எவ்வாறு சாத்தியம்?

கந்தன் கருணையால்  உலகளாவிய  நேரலையில் இந்த ஒளி உடல் செயல்பாடு நிகழவுள்ளது. ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் இந்த புனித தெய்வீக பணிக்கு ஸ்ரீ ரெஜித் குமார் அவர்களுக்கு ஆதரவாக இருப்பார் என்று முருகப்பெருமான் வெளிப்படுத்தியுள்ளார்.












ஸ்ரீ ரெஜித் குமார் அவர்களுக்கு முருகப்பெருமான் ஒரு சிறப்பான தியான முறையை கற்பித்துள்ளார். இதன் மூலமாக தேவையான தெய்வீக ஆற்றலை பெற்று ஒளி உடல் செயல்பாட்டை நிகழ்த்தமுடியும். இந்த நேரலையில் கலந்துகொள்ளும் அனைவரிடமும் ஸ்ரீ ரெஜித் குமார் அவர்கள் விளக்கேற்றி, முருகப்பெருமான் படம் மற்றும் ஸ்ரீ இராமலிங்க சுவாமிகளின் படங்களையும் வைத்து பிரார்த்தனைகள் செய்ய கோரியுள்ளார். அனைவரும் ஸ்ரீ ரெஜித் குமார் அவர்கள் திரிசூரில் உள்ள பூஜை அறையில் செய்யும் பிரார்த்தனைகளை நேர் காணல் மூலம் காணலாம்.

ஸ்ரீ ரெஜித் குமார் அவர்கள் தியானத்தில் தூண்டப்படும் தெய்வீக ஆற்றல்களை  ஒளிரும் விளக்குக்கு அனுப்புவார். ஸ்ரீ ரெஜித் குமார் அவர்களுடன் நேரலையில் இணைந்து பிரார்த்தனைகள் செய்யும் அனைவரின் பூஜை அறையில் இருக்கும் விளக்கிற்கு அவ்வாற்றல்கள் சென்றடைந்து, பிறகு அவர்களின் உடலுக்கு சென்றடையும். தனி நபரின் ஆன்மீக விழிப்புணர்வின் அடிப்படையில் காலப்போக்கில் படிப்படியாக மாற்றம் செய்யும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவ்வப்போது இந்த ஒளி உடல் செயல்பாட்டு நிகழ்ச்சி நடைபெறும். அனைத்து நம்பிக்கைகள், தேசியங்கள், அணைத்து வயதினரும் இந்த நேரலை நிகழ்வில் எவ்வித தடையுமின்றி கலந்துகொள்ளலாம். இந்நிகழ்விற்கான பதிவு அனைவருக்கும் இலவசம். முதல் ஒளி உடல் செயல்பாடு அமர்வு நேரலையில்   17-10-2021 மாலை 3.30 மணிக்கு (இந்திய நேரம்) நடைபெறவுள்ளது.

 

பலன்கள்: இந்நிகழ்வு மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரித்து அவர்களின் கல்விக்கு உதவும், வணிகர்களின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தவும், அதிக வேலை செய்பவர்களின் பதற்றங்களை குறைக்க உதவும் என்று முருகப்பெருமான் வெளிப்படுத்தியுள்ளார்.

LMRK இயக்கத்துடன் இணைந்திருங்கள் மற்றும் அவர்களின் வலைதளத்தைப் பார்வையிடவும் - www.lionmayura.org

பதிவு செய்ய : http://lionmayura.org/light.php

நேரடி ஒளிபரப்பு பார்க்க –

Facebook: https://www.facebook.com/lionmayura                                  

YouTube: https://www.youtube.com/c/LionMayuraRoyalKingdom       

Instagram: https://instagram.com/lionmayura                           

Twitter: https://twitter.com/LionMayura

 

ஓம் சரவணபவாய நமஹ

 

எழுதியவர்: திருமதி. சௌமியா நிக்கில்

தமிழாக்கம்: திரு.ஆர். ராம் அர்ஜுன்

Comments

Popular posts from this blog

THE SIGNIFICANCE OF CHANTING OM SARAVANA BHAVAYA NAMAHA

BOGAR SIDDHAR AND THE SIDDHA TRADITION

SHRI REJITH KUMAR'S ROLE IN THE RETURN OF KUMARI KANDAM ENERGIES ON EARTH - PART 1